Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் 59வது படத்துக்கு ரஜினி படத்தின் பெயர்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு ஜூலை ஒன்றாம்தேதி முதல் தொடங்கவிருக்கிறது. தொடக்கத்தில் ஒரு பாடலைத்தான் படமாக்கவிருக்கிறார்களாம்.

ராஜாராணி படத்தைத் தொடங்கும்போதும் முதலில் பாடலைத்தான் படமாக எடுத்தாராம் அட்லி. அந்த சென்டிமென்ட் காரணமாகவே இந்தப்படத்திலும் முதலில் பாடலைப் படமாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
 
படத்தொடக்கவிழாவன்று இயக்குநர் அட்லியிடம் படத்தின் பெயர் பற்றிக் கேட்டபோது, இன்னும் பெயர் வைக்கவில்லை, வைத்தால் சொல்லமாட்டோமா? என்று கேட்டார். படத்துக்காக அவர்கள் தேர்வு செய்திருக்கும் பெயர் மூன்றுமுகம் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி நடித்த இந்தப்படத்தின் உரிமையை தற்போது வைத்திருக்கும் தயாரிப்பாளரிடம் அந்தப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை வாங்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கினறனவாம். இந்தப்படத்தில் விஜய், மூன்றுவிதமான தோற்றங்களில் வருகிறார்ராம். அதனால் பல பெயர்களைப் பரிசீலித்து, இந்தப்பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்தப்பெயரைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close