Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ஷூட்டிங் போகும் வாலு டீம்!

 கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு இப்போதுவரை சிம்புவின் படங்கள் ஏதும் வெளியாகாமல் இருக்கிறது. அறிவித்த வாலு படத்தின் ரிலீஸ் தேதியும் பல மாற்றங்களை அடுத்து ஜூலை 17ம் தேதி என இறுதியாகியுள்ளது. ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட ரிலீஸ் தேதி அறிவிப்புகளை கடந்து மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட வேளையில் இன்னும் ஒரு பாடல் எடுக்கப்படாமல் உள்ளது. ‘வாத்தியார்’ என்ற பாடலில் சிம்பு, எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் மற்றும் சிம்பு என நான்கு கெட்டப்களில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்தப் பாடலின் ஷூட்டிங் தான் நாளை 3ம் தேதி நடக்க இருக்கிறது. சிம்புவுடன் சரோஜா தேவி, குஷ்பூ, சிம்ரன், ஹன்சிகா என நான்கு நாயகிகள் இந்த பாடலில் இடம்பெற இருப்பதாக முன்னரே திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது சிம்புவும் ஹன்சிகாவும் மட்டுமே நடிக்க இருக்கும் இந்த பாடல் இனிதான் படமாக்கப்பட உள்ளது. 

இன்னும் ஒரு பாடல் காட்சி மீதி இருக்கும் பட்சத்தில் எப்படி படக்குழு முன்னரே படத்தின் ரிலீஸ் தேதிகளை அறிவித்தனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் ஒரே கேள்வி. இந்த ரிலீஸ் தேதியாவது மிஸ் ஆகாமல் படம் வெளியாகுமா என ரசிர்கள் தற்போது எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close