Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்யா ஹீரோ, விஷ்ணுவிஷால் வருத்தம்?

 ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், மியாஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடித்த இன்றுநேற்றுநாளை படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறதாம். நல்லபெயர் மட்டுமின்றி நல்லவசூலும் இருக்கிறதென்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தை எடுக்கும்போதே இரண்டாம்பாகத்தை எடுக்கலாம் என்று திட்டமிட்டு அதற்கேற்ப திரைக்கதையை அமைத்திருந்தார்களாம். இப்போது இந்தப்படம் வெற்றி என்றவுடன் இரண்டாம்பாகம் எடுப்பது உறுதி என்பது மட்டுமல்ல உடனே தொடங்குவது என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இரண்டாம்பாகத்தில் முன்னணி நடிகர் கதாநாயகனாக நடிப்பார் என்று தயாரிப்புத்தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த முன்னணிநாயகன், ஆர்யாதான் என்று சொல்கிறார்கள். இந்தப்படத்திலேயே டைம்மெஷினைக் கண்டுபிடிக்கிற விஞ்ஞானியாக ஆர்யாதான் நடித்திருந்தார்.

படத்தின் தொடக்கத்தில் ஒரு காட்சியிலும் கடைசியில் ஒருகாட்சியிலும் மட்டும் நடித்திருந்த ஆர்யாதான் அடுத்த பாகத்தில் முழுமையான நாயகனாக வரப்போகிறார் என்றும் இந்தப்படத்தில் பாதிவிஞ்ஞானியாக நடித்திருந்த பார்த்தசாரதியின் பேரன்தான் ஆர்யா என்று சொல்லி முதல்பாகத்துக்கும் இரண்டாம்பாகத்துக்கும் சம்பந்தத்தை ஏற்படுத்தவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்தப்படத்தில் நாயகனாக நடித்த விஷ்ணுவிஷாலுக்கு மட்டும் வருத்தம் இருக்கலாம். ஒரு வெற்றிக்கதை தன்னைவிட்டு இன்னொரு நாயகனிடம் போகும்போது யார்தான் வருத்தப்படாமல் இருக்கமுடியும். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close