Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷங்கர்- ரஜினி படத்தில் அர்னால்டு நடிக்கிறார்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்தபடத்தில் இன்னொரு முக்கியக்கதாபாத்திரத்தில் ஷாருக்கான், அஜித் உட்பட பல நடிகர்களை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்ததாம். நிறைய இந்திநடிகர்களை இதற்காக அணுகியும் தோல்வியே கிடைத்திருத்திருக்கிறது.

கடைசியாக, இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஷங்கர் அணுகிய நபர் அர்னால்டு. ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவுக்காக அவர் சென்னை வந்திருந்தார். அப்போது அவருடன் நல்லஅறிமுகம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிதாக இங்கே ஒரு படம் தயாராகிறது என்பதை அவரிடம் எடுத்துச்சொல்லி அவரை நடிக்கக்கேட்டார்களாம். அவரும் சம்மதம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

சுமார் இரண்டாண்டுகள் நடக்கவிருக்கும் அந்தப்படத்தின் வேலைகளில் படப்பிடிப்பு மட்டும் ஓராண்டுநடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதில் அர்னால்டு இருபத்தைந்துநாட்கள் வரை நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அர்னால்டு நடிக்கிறார் என்றதும் ரஜினியும் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அர்னால்டு நடித்துவிட்டால் இந்தியத்திரையுலகில் தமிழ்த்திரையுலகம் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்பதில் மாற்றமில்லை.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close