Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவர் சொன்ன ஒரு வார்த்தை - மீண்டும் சர்ச்சையில் ராதிகா ஆப்தே!

 தோனி, அழகு ராஜா படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தி , தெலுங்கு என பல படங்களில் நடித்துவரும் ராதிகா ஆப்தே சமீபகாலமாக தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். ஏற்கனவே ஹாலிவுட் படத்தில் இவர் நிர்வாணமாக நடித்த வீடியோ திடீரென வெளியானத்தில் சிக்கல் உண்டாகியது. 

இதுதவிர்த்து இந்தியில் இவர் நடித்த ’ஹண்டர்’ படம் சென்சாரால் 18வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க முடியாது என ‘ஏ’ சான்று பெற்ற படமாக இருக்கவே ராதிகாவை செக்ஸ் நடிகை எனக் கூற துவங்கிவிட்டனர். இந்நிலையில் அமைதியாக இல்லாமல் தெலுங்கு பட நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பற்றி கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். 

தெலுங்கு சினிமா நடிகர்கள் , மற்றும் பட அதிபர்கள் என சிலர் நல்லவர்களாக இல்லை. அங்கிருக்கும் பல நடிகர்கள், இயக்குநர்கள் பெண்களை மதிப்பதே இல்லை. ஆணாதிக்கம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. எனவே தான் தெலுங்கு சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனால் தெலுங்கு சினிமா உலகம் ராதிகா அப்தே மீது சற்று கோபத்தில் இருந்து வருகிறார்கள். மாதம் ஒருமுறை சர்ச்சை கிளப்பிவிடுவது இவரது வாடிக்கையாகிவிட்டது என சினிமா உலகம் தற்போது கிசுகிசுக்கத் துவங்கிவிட்டது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close