Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினியாக நடிக்கிறார் பவர் ஸ்டார்? விடுவார்களா ரசிகர்கள்!

 சினிமா காரர்களை பொருத்தவரை எதுவும் சினிமா எதற்கும் சினிமாதான் போலும். சமுதாயத்தில் ஏதேனும் குறிப்பிடும் படியான சம்பவங்கள் நடந்தால் அதனை படமாக எடுத்து விடுவது சினிமாக் காரர்களின் வேலை. தற்போது சினிமாவின் சர்ச்சையையே படமாக எடுக்க முடிவு செய்துவிட்டனர். 

லிங்கா நஷ்ட ஈடு பிரச்னையை படமாக எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இதில் ரஜினி வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருக்கிறார் என்பதுதான் சிறப்பு. படம் ஆரம்பித்தது முதல், ரிலீஸ், அடுத்து நடக்கும் பிரச்னை என படம் முழுவதும் மறைமுகமாக லிங்கா பிரச்னையை கூறப் போவதாக தெரிகிறது. 

இதுகுறித்து தற்போது ரசிர்களும் ரஜினி வேடத்தில் பவர் ஸ்டார் எப்படி நடிக்கலாம் என கோபத்துடன் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து விநியோகஸ்தர் சிங்காரவேலன் கூறுகையில், இந்த படம் முழுக்க முழுக்க பார்ப்பவர்களை சந்தோஷம் படுத்தும் ஜாலியான படம்.  

ஒரு படம் வெளியாகிறது, அந்த படத்தில் ஏற்படும் நஷ்ட ஈட்டை பவர் ஸ்டார் எப்படி திருப்பி தருகிறார் என்பதே படத்தின் கதை. இதில் ரஜினியை எந்த விதத்திலும் அவமதிப்பது போல் காட்சிகள் இருக்காது, ஏன் ரஜினியே படத்தை பார்த்தால் சிரித்துவிடுவார். படத்தை அவருக்கும் போட்டுக்காட்ட தயாராக இருக்கிறோம். ஜாலியாக ஒரு படத்தின் ரிலீஸ் அதன் பின்புலம் என கதை நகர இருப்பதாக கூறியுள்ளார்.

என்னதான் சிங்காரவேலன் இப்படி கூறினாலும் , படத்தின் காட்சிகள் எப்படியும் சில இடங்களில் பிரச்னை தரும் , மேலும் அவரே எடுக்கும் படம் என்கையில் அவருக்கு நேர்ந்த பிரச்னையைத் தானே பேசுவார் என்கிறது இன்னொரு தரப்பு. இதெல்லாம் சரிதான் என்றாலும் ரஜினியாக பவர் ஸ்டார் எப்படி நடிக்கலாம் என ரசிகர்கள் தரப்பிலிருந்து கேள்விகள் எழும் என்பது உறுதியே. பொருத்திருந்து பார்ப்போம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்