Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்புக்குட்டியை புகைப்படம்தான் எடுத்தேன்-அஜித் விளக்கம்.

வீரம் படத்தில் நடித்தபோது அந்தப்படத்தில் உடன்நடித்த அப்புக்குட்டியோடு மிகுந்தநட்பாகிவிட்டார் அஜித். அப்போதே எல்லாப்படங்களிலும் ஒரேமாதிரி வந்துகொண்டிருக்கிறாய், தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடி என்று அப்புக்குட்டிக்கு அறிரை சொன்னாராம் அஜித். அதற்கு, அப்புக்குட்டியோ, நமக்கு எதுக்குண்ணே அதெல்லாம் இப்படியே நடிச்சாப் போதும்ணே என்றாராம்.

இல்லையில்லை உன் தோற்றத்தை மாற்றுகிறேன், சிறந்தகலைஞர்களை வைத்து உன் தோற்றத்தை மாற்றி நானே புகைப்படமெடுத்துத் தருகிறேன் என்று சொல்லியிருந்தாராம். அப்போது சொன்னதை அப்புக்குட்டி உட்பட எல்லோருமே மறந்துவிட்டார்களாம். அதை மறக்காமல் இருந்த அஜித், சிறந்த உடையலங்கார நிபுணர் மற்றும் சிகையலங்கார நிபுணர்களை வரவழைத்து அவருடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி புகைப்படம் எடுத்திருக்கிறாராம்.

நேற்று புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். தோற்றத்தை மாற்றியது மட்டுமின்றி அப்புக்குட்டியிடம் இனிமேல் சொந்தப்பெயரையே பயன்படுத்துமாறு கூறிவிட்டாராம் அஜித். அவருடைய இயற்பெயர் சிவபாலன். அதைத்தான் இனிமேல் அவர் பயன்படுத்துவார் என்றும் சொல்கிறார்கள். அஜித் எடுத்த புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்