Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்காவுக்கு விரைவில் கல்யாணம்?

கம்பீரமான ராணி, விலை மாது, கியூட் ஹீரோயின், கிளாமர் பாம், என அனுஷ்கா தமிழ் தெலுங்கு என எடுக்காத பாத்திரங்களே இல்லை. 33வயதான அனுஷ்காவிடம் வைக்கப்படும் ஒரே கேள்வி எப்போ கல்யாணம் என்பதே. 

சென்ற வருடம் இறுதியிலேயே கல்யாணம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்த்திருந்த வேளையில் அடுத்தடுத்து ‘லிங்கா’, ‘என்னை அறிந்தால்’, என ஒப்பந்தமாகினார். மேலும் இப்போதும் ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என அனுஷ்காவின் படங்கள் இன்னும் பிரம்மாண்டங்களை நோக்கி இந்திய அளவில் எதிர்பார்க்கும் படங்களாக மாறிவிட்டன.

இந்நிலையில் தனது திருமணம்  குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அனுஷ்கா. இப்போதைக்கு நான் கல்யாணம் குறித்து சிந்திக்கவே இல்லை. ஆனால் கண்டிப்பாக கல்யாணம் செய்துகொள்வேன். அப்படி கல்யாணம் செய்யும் பட்சத்தில் அனைவருக்கும் அறிவித்துவிட்டுதான் திருமணம் செய்துகொள்வேன். 

பொருத்தமான மாப்பிள்ளை வரும்போது திருமணம் உறுதி. அதே சமயம் அது காதல் திருமணமா அல்லது வீட்டில் பார்த்தா என்பது சொல்ல முடியாது. எனக் கூறியுள்ளார் அனுஷ்கா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா ,கார்த்தி ஏன் சிம்பு, தனுஷ் இவர்களுடன் கூட தலை காட்டிவிட்டார் அனுஷ்கா.

தற்போது இரண்டு பிரம்மாண்ட படங்கள் மற்றும் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி என அனுஷ்கா செம பிஸி என்றாலும் சமீப காலமாக நிறைய படங்களை ஒப்புக் கொள்வதில்லை. குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடிப்பது குறிப்பிடத்தக்கது.  ஒருவேளை திருமணத்திற்கு தயாராகலாம் எனவும் கூறப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close