Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்ரம் படத்தில் பிரியாஆனந்த் நடிக்காதது ஏன்?

அரிமாநம்பி படஇயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு தற்போது தடைபட்டிருக்கிறது. சிக்கல்களைக் களைந்து படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

இந்தப்படத்தில் நாயகியாக காஜல்அகர்வால் நடிக்கவிருக்கிறார். இன்னொரு நாயகியாக முதலில் பிரியாஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசிநேரத்தில் அவர் இல்லை அவருக்குப் பதிலாக பிந்துமாதவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்தக்கடைசி நேர மாற்றம் காரணமாகவும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் பிரியாஆனந்த் இந்தப்படத்திலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா? என்கிற கேள்விக்கு எந்தப்பதிலும் இல்லாமல் இருந்தது. இந்தப்படத்தின் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக அவர் இல்லையென்பதாலேயே மாற்றப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் அவருடைய பாத்திரம் மிகவும் ஒல்லியானதாக இருக்கவேண்டுமாம்.

ஆனால் இவர் சற்று குண்டாகத் தெரிந்தார், அதையாவது சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்திருந்தார்களாம். அந்தநேரத்தில், திடீரென அவருக்கு சிறயஅளவில் மூக்கில் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டியதாகிவிட்டதாம். உடனே படப்பிடிப்புக்குக் கிளம்பமுடியாமல் ஓய்வெடுக்க வேண்டியிருந்ததாம். அதனால் அவரால் மலேசியா வரமுடியாது என்பதால் இரண்டுதரப்பினரும் கலந்துபேசியே அவருக்குப் பதிலாக பிந்துமாதவியை ஒப்பந்தம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close