Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளம் நடிகர்கள் மீது விமர்சனம்: நடிகை ராதிகாவுக்கு இயக்குநர் கண்டனம்!

அண்மையில் சென்னையில் நடந்த 'உயிரே உயிரே' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், "மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதீர்கள்" என்று இளம் நடிகர்களை கருத்தில் கொண்டு நடிகை ராதிகா விமர்சித்தற்கு இயக்குநர் ராஜசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் திரைப்பட இயக்குநர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,'' ஒரு படத்தின் விழா மேடையில் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை பற்றியோ, அதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றியோதான் பேச வேண்டும். ஆனால், அரசியல் நோக்கில் நடிகர் சங்க பிரச்னையை மறைமுகமாக ராதிகா பேசியுள்ளார்.

'இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. வானத்தை பார்த்து மேலே எச்சில் துப்பிக் கொண்டிருக்கின்றனர்' என்று அவர் கூறியது தவறானது. இளம் நடிகர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையுடன் பழகுகின்றனர். ஒருவருக்கு ஒரு கதை பொருந்தவில்லையென்றால் மற்றொரு நடிகரின் பெயரை பரிந்துரைக்கின்றனர்.அந்தளவுக்கு அன்யோன்யமாக இளம் தலைமுறை நடிகர்கள் உள்ளனர். மூத்த நடிகர்கள் இளம் நடிகர்களுக்கு வழிவிட வேண்டும். ராதிகாவின் இந்த கருத்து நாகரீகமற்றது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close