Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஞ்சலி சென்னைக்கு வர விரும்பவில்லையா?

ராஜசேகர் எனும் புதியவர் இயக்கத்தில் விமல் அஞ்சலி நடிக்கும் மாப்பிள்ளைசிங்கம் படத்தின் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ஒரேயொரு பாடல் மட்டும்தான் படமாக்கவேண்டியிருக்கிறதாம்.

அமெரிக்கப்பயணம் மற்றும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு ஆகியனவற்றால், அஞ்சலியின் தேதிகள் கிடைக்காததால் அந்தப்பாடல் படமாக்கப்படாமல் இருந்ததென்று சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு வரிசையாக வேலைகள் இருந்ததென்றும் சொன்னபடி இந்தப்படத்தின் பாடலைப் படமாக்கத் தேதிகள் கொடுத்துவிட்டாராம். ஜூலை இரண்டாம்வாரத்தில் பாடல்படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.

சென்னையில் இதன் படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. உடல்நிலை சரியில்லாத அம்மாவைப் பார்த்துக்கொள்ளவேண்டியிருப்பதால் படப்பிடிப்பை ஐதராபாத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் மதனிடம் கேட்டுக்கொண்டாராம் அஞ்சலி. அவருடைய வேண்டுகோளை ஏற்று ஐதராபாத்திலேயே பெரியசெட் ஒன்றைப் போட்டுப்படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே அப்பாடக்கர் படத்தின் பாடலையும் ஐதராபாத்தில் வைத்தே எடுத்தார்கள். அப்படியானால் சென்னை வரவே அஞ்சலி விரும்பவில்லையோ என்கிற கேள்வி எழுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close