Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் அனிருத்!

  ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் பற்றி பலவிதமான தகவல்கள் உலவிவந்தன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்தை அவருடைய நண்பரான ஆர்.டி.ராஜா, 24ஏஎம்ஸ்டுடியோஸ் என்கிற புதியபடத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். அட்லியிடம் பணியாற்றிய பாக்யராஜ்கண்ணன்  எழுதி இயக்குகிறார்.

இயக்குநர் புதியவர் என்றாலும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் மிகவலிமையானவர்களாக இருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைக்கிறார், சண்டைப்பயிற்சி அனல்அரசு, படத்தொகுப்பு ரூபன், கலைஇயக்கம் டி.முத்துராஜ், ஒலிவடிவமைப்பு ரசூல்பூக்குட்டி இவர்களோடு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஷான்புட் என்கிற ஆஸ்கர்விருது பெற்ற மேக்கப்கலைஞரும் இந்தப்படத்தில் பணியாற்றவிருக்கிறாராம்.

இந்தப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. அதில் படத்தில் பணியாற்றுகிறவர்கள் மட்டும் கலந்துகொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் மற்றும் கதாநாயகி பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். இந்தப்படம் காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக இருக்குமென்றும், இதுவரை பார்த்த சிவகார்த்திகேயனை இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் பார்க்கலாம் என்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகத் தெரிகிறது.   

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close