Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு பாடல்கள் இல்லாமல் படம் தயார்- சிம்புவின் இதுநம்மஆளு பட அப்டேட்!

மூன்று வருடம் கழித்து சிம்பு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்திற்கான டிரெய்லர் வெளியீடு மற்றும்  பட வெளியீடு பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஆண்ட்ரியா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவந்த இதுநம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாம். மொத்தமாக 131 நிமிடம் படம் ஓடக்கூடியதாகவும், இன்னும் இரண்டு பாட்டுகள் மட்டுமே படமெடுக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். டிரெய்லர் ரெடியாகிவிட்டது. அதனால் ஆடியோ வெளியீடும், டிரெய்லரையும் விரைவில் வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்கள்.

சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. வாலு ஜூலை 17ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் கெளதமுடன் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவனுடன் கான் உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து வெளியிட சிம்பு திட்டமிட்டிருக்கிறாராம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close