Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் கிருஷ்ணா மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு

இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும், நடிகருமான கிருஷ்ணா தனது மனைவியிடமிருந்து விகாரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ’அலிபாபா’, ‘கழுகு’, ‘கற்றது களவு’ யாமிருக்க பயமே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் கிருஷ்ணா.

தற்போது தனது அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவுடன் இன்னொரு நாயகனாக ‘யட்சன்’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி ஹேமலாதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த இவரது திருமணத்திற்கு சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திருமணம் ஆகி 16 மாதங்களே ஆன நிலையில் தற்போது விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளார் கிருஷ்ணா. தன் மீது சந்தேகப் பட்டு தினம் தினம் சித்ரவதை செய்ததாகவும், அதனால் நடிப்பில் முழுமையாக மனதை செலுத்த முடியாமல் போனது எனவும் உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்ததாகவும் சில நேரங்களில் அவரால் ரத்தக் காயங்கள் கூட உண்டானது எனவும் கிருஷ்ணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் முடிந்து வீட்டுக்கு லேட்டாக வந்தால் கதவை திறக்காமல் பல நாட்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும், சில நேரங்களில் தன்னை துன்புறுத்த வேண்டி போலீஸில் பொய் புகார்கள் அளித்ததாகவும் கிருஷ்ணா தனது மனைவி மீது குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close