Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டேன்: கமல்ஹாசன் பேட்டி

மனிதம் தான் முக்கியம், மதம் முக்கியமில்லை. மதம் இல்லாமல் போனாலும் மனிதம் இல்லாமல் போகாது. எல்லோரையும் மனிதராக தான் பார்க்கிறேன். அதில் ஜூயரா ஐயரா என்றெல்லாம் பார்க்க மாட்டேன் என்று பாபநாசம் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் பேசினார்.

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கே பாபநாசம். மலையாளத்தில் இயக்கிய ஜீத்துஜோசப் தான் தமிழிலும் இயக்க  இப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

“ நல்ல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு  தரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இப்படத்தை நான் தேர்ந்தெடுத்தேன். மலையாளம் , தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து ரசிகர்களையும் சென்று சேர்ந்த படம். சில நல்ல கதைகள் தானாக என்னை வந்துசேரும், அப்படி வந்த படமே பாபநாசம்.” என்று தொடங்கி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் கமல்.

படபிடிப்பின் போது நான்குநேரி வானமாமலை ஜீயர் சுவாமியை சந்தித்தீர்களாமே?

பாபநாசம் படப்பிடிப்புக்கு இடம் தந்து பெரிதும் உதவியவர் இவரே. அவருக்கு நன்றி தெர்விப்பதற்காக சென்று பார்த்தேன். இதில் மதம் முன்னிலைப்படுத்தவில்லை. மனிதம் தான் முக்கியம். மதம் முக்கியமில்லை. எல்லோரையும் மனிதராக மட்டும் தான் பார்க்கிறேன். அதில் ஜீயரோ ஐயரோ என்றெல்லாம் பார்க்கமாட்டேன்.

கெளதமியை படத்தில் நடிக்க வைக்க காரணம் நீங்கள் தானா?

இயக்குநர் ஜூத்து ஜோசப் தான் காரணம். படத்திற்கு கெளதமியையே நடிக்க வைக்கலாம் என்றார். எனக்கு ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. பிறகு தயாரிப்பாளர், ஜெயமோகன் என்று எல்லோரும் சொல்லவே நடிக்க வைத்தோம். பிறகு எல்லோருடைய முடிவும் சரியாகவே இருந்தது. அந்த அளவுக்கு நன்றாகவே நடித்தார் கெளதமி.

பாலியல் குற்றங்கள் சார்ந்த படமே பாபநாசம். அதைப்பற்றி உங்கள் கருத்து?

நள்ளிரவில் நகைகளுடன் பெண்கள் தனியாக செல்லும் அன்றே முழு சுதந்திரம். ஆனால் இன்று அப்படிப்பட்ட நிலை இல்லை. பஸ்ஸுக்குள்ளேயே கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. ஒவ்வொருவரும் தானாக திருந்தினாலே இக்குற்றங்கள் குறையும். நம்முடைய இடத்தை நாம் தான் சுத்தமாக வைக்க வேண்டும். ஆனால் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தினால் தான் நாம் செய்கிறேன். நமக்கே சுயக்கட்டுப்பாடு வேண்டும். வந்தால் இந்த நிலை மாறும்

உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள்?

என் தாய் தந்தையர் சொல்லிக்கொடுத்த உணவுப்பழக்கங்களை கடைபிடிப்பதில்லை. சிறுவயதிலேயே அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். கெட்டப்பழக்கங்களை விட்டுவிட்டேன். பாக்கு போடும் பழக்கம் எனக்கு உண்டு அதையும் விட்டுவிட்டேன். இப்போ புகைப்பிடிப்பதும் இல்லை.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close