Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு உதயநிதிஸ்டாலினுக்குப் பலன் தருமா?

உதயநிதிஸ்டாலின் தயாரிக்கும் படங்கள் மற்றும் அவர் வாங்கி வெளியிடும் படங்களுக்கு வரிவிலக்குக் கொடுப்பதில் தமிழகஅரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சொல்லப்பட்டது. இதுதொடர்பாக உதயநிதிஸ்டாலின் நீதிமன்றத்தை அணுகினார்.

சென்னைஉயர்நீதிமன்றம் அவருடைய வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதன்பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார் உதயநிதிஸ்டாலின்.  ஏப்ரல் 1 ஆம் தேதியன்று தமிழகஅரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் வரிவிலக்கு தொடர்பாக முடிவெடுக்க நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை தேவைப்படும் என்று சொல்லப்பட்டதாம்.

அதன்பின்னர் ஜூலை 1 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தணிக்கைக்குழு சம்பந்தப்பட்ட திரைப்படத்தைப் பார்வையிட்ட முப்பதுநாட்களுக்குள் முடிவுஎடுக்கவேண்டும் என்றும் இது தொடர்பாக ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்ற காலப்பிரமாண விவரத்தை அறிக்கையாக மாநிலஅரசு தாக்கல் செய்யவேண்டும் எள்றும் உத்தரவு பிறப்பித்தனராம்.

இந்தத் தீர்ப்பின் மூலம் இனிவரும் காலங்களில் உதயநிதிக்குப் பலன் கிடைக்குமா? என்பது அடுத்து அவருடைய படம் வெளிவருகிற நேரத்தில்தான் தெரியும் என்றாலும், இதுவரை, வரிவிலக்குக் கொடுக்க ஒரு காலவரையறை இல்லாமல் இருந்த நிலையை மாற்றி அதற்கொரு காலஎல்லையை உருவாக்கிக் கொடுத்தது உதயநிதிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையினருக்குமே பலனளிக்கக்கூடிய விசயமென்று சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்