Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷாலுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா?

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்துவந்த ‘பாயும் புலி’ படப்படிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதை முன்னிட்டு படக்குழுவில் உள்ள அனைவருக்கும் தங்க நாணயங்களை பரிசாகக் கொடுத்தார் விஷால். 

இந்த படத்தின் முடிவையடுத்து அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் விஷால். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ நாயகி கேத்ரீன் தெரசா நடிக்க இருக்கிறார். ’கணிதன்’ படத்தில் அதர்வா முரளி மற்றும் செல்வராகவனின் ‘கான்’ படத்தில் சிம்புவுடன் நடித்துவரும் கேத்ரீன் தெரசா இப்போது விஷாலுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். 

’மெட்ராஸ்’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதோடு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் டிவி விருது, விகடன் விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. விஷாலுடன் கேத்ரீன் நடிக்க இருக்கும் இந்த பாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் ‘ரஜினிமுருகன்’ நாயகி கீர்த்தி சுரேஷ். 

அடுத்தடுத்து படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷின் கால்ஷீட் பிஸி காரணமாக தற்போது கேத்ரீன் தெரசா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசை ஆதி. இந்த படத்தை துவக்கும் முன் பாண்டிராஜ் தற்போது ‘ஹைக்கூ’ மற்றும் இது நம்ம ஆளு’ படங்களை முடிக்க வேண்டி பிஸியாக வேலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்