Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகவா லாரன்ஸுக்கு நோ சொன்ன காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால் இடையில் ‘ஜில்லா’ படத்திற்கு பிறகு பெரிய இடைவெளியில் படங்கள் ஏதும் இல்லாமல் இருந்தார். அதிக சம்பளம், தனது பட நிகழ்ச்சிகளுக்கே வராமல் இருப்பது என தமிழ் சினிமா படாதிபர்கள் காஜலை சில காலம் விலக்கி வைத்திருந்தார்கள். 

எனினும் மீண்டும் சில சம்பள கெடுபிடிகளை தவிர்த்து தனுஷுடன் ‘மாரி’ விஷாலுடன் ‘பாயும் புலி’ என நடித்துள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலை கேட்டுள்ளார். 

லாரன்ஸ் இயக்கும் இப்படத்தில் நாயகனாக அவரது தம்பி எல்வின் நடிக்க இருக்கிறாராம். முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஏனெனில் சம்பளமாக லாரன்ஸ் தரப்பு 2 கோடி கொடுக்க தயாராக இருந்து காஜல் அகர்வால் இதை மறுத்துள்ளாராம். 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close