Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு குழந்தைகளுடன் சூர்யா - அனுஷ்கா : சிங்கம் 3 அப்டேட்!

 ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், நாசர், ராதரவி நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘சிங்கம்’ . இந்த படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் படத்தின் இரண்டாம் பாகமும் சூர்யா ,அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியாகி கமர்ஷியல் ரீதியாக அந்த படமும் ஹிட்டானது. 

எனினும் முதல் பாகத்தின் முடிவில் சூர்யா அனுஷ்கா இருவரும் திருமணம் முடிந்து காரில் செல்வது போல் ஹரி அமைத்திருப்பார். ஆனால் இரண்டாம் பாகத்தில் சூர்யா அனுஷ்கா திருமணம் செய்யாமல் இருப்பது போல் காட்டியிருப்பார். இது படம் வெளியான தருணத்தில் கொஞ்சம் விமர்சனங்களுக்கு ஆளானது. 

இந்நிலையில் இந்த படங்களின்  அடுத்த பாகமான ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யா அனுஷ்கா இருவருக்கும் திருமணம் முடிந்து இரு குழந்தைகள் இருப்பது போல் கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் ’ஹரி’. அனுஷ்கா தவிர்த்து படத்தில் இன்னொரு நாயகி நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close