Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக கார்த்தி படத்திற்கு கிடைத்த வாய்ப்பு!

கார்த்தி நாகார்ஜுன் நடிப்பில் பிவிபி. சினிமாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நடந்துவருகிறது. வம்சி படிபல்லி இயக்கும் இப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிவருகிறது. 

தமன்னா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்குத்தான் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்க இருந்து சில பிரச்னைகளுக்கு பிறகு தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது இந்த படக்குழு அடுத்து படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கும் பகுதிதான் சுவாரஸ்யமானது. 

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக ஐரோப்பாவின் சேர்பியா தலைநகரம் பெல்கிரேடில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதுவரை தென்னிந்தியாவின் எந்த ஒரு படத்தின் ஷூட்டிங்கும் இங்கே நடத்தியதில்லையாம். பழங்கால கட்டிடங்கள், மாணவர் சதுக்கம், உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் இந்த பெல்கிரேடில் உள்ளன. 

இந்த பெல்கிரேட் படப்பிடிப்பையடுத்து  பாரிஸ், உள்ளிட்ட ஐரோப்பாவின் முக்கிய இடங்களிலும் படப்பிடிப்புகள் நடக்க உள்ளன. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close