Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினியை எந்த வகையிலும் பாதிக்காது : பவர் ஸ்டார் பதில்

’லிங்கா’ பிரச்னை ஒருவழியாக சமீப நாட்களாக தான் இல்லை என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென சிங்காரவேலன் தரப்பு லிங்கா பிரச்னையை மையமாகக் கொண்டு ஒரு படம் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 

இதில் ரஜினி கேரக்டரில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருக்கிறார் என்பதுதான் இன்னும் சிறப்பு. இதுகுறித்து அவர் கூறுகையில் , லிங்கா பிரச்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள படத்தில் நான் ரஜினியாக நடிக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் காமெடியான பொழுதுபோக்கு படமாக மட்டுமே இருக்கும், யாரையும் எந்த வகையிலும் இந்த படம் காயப்படுத்தாது. மேலும் தலைவரை அவமதிக்கும் எந்த பாத்திரத்திலும் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கண்டீஷன் போட்டுவிட்டேன். 

அவர் தனது வாழ்வில் அடைந்த ஒவ்வொரு வெற்றி மற்றும் ஒரு படம் தந்த தோல்வி, அதற்கு அவரே விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுத்து ஆவண செய்தல் என படத்தின் கதை இருக்கும். ஜாலியான ஒரு படம். 

இந்த படத்தில் ‘வந்தேன்டா பால்காரன் பாடல் வந்தேன்டா பவர்காரன்’ என மாற்றி ரீமிக்ஸ் ஆக உள்ளது. ஹீரோயினாக சதாவிடம் பேச உள்ளதாகவும், இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை எனவும் பவர் ஸ்டார் சீனிவாசன் படம் குறித்து கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்