Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரைவில் குடும்பத்தில் செட்டிலாகி விட துடிக்கும் நடிகைகள்!

 முன்பெல்லாம் நடிகைகள் என்றாலே குறைந்த பட்சம் முப்பது முப்பந்தைந்து வயது வரை நடித்துவிட்டு பின்னர் திருமணம் குழந்தைகள் என செட்டிலாவார்கள். ஆனால் இப்போது கதையே வேறு அதிகபட்சம் 24 முதல் 25 வயதுவரை நடித்துவிட்டு சீக்கிரம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவே நினைக்கின்றனர். 

ஏற்கனவே சமந்தா இன்னும் ஓரிரு வருடங்களில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடுவேன் என கூறினார். என் குழந்தைகள் 15 வயதில் இருக்கையில் அவர்களுக்கு 60 வயது தாயாக நான் இருக்க மாட்டேன் என பகிரங்க ஸ்டேட்மெண்டும் வெளியிட்டார். 

தற்போது அந்த வகையில் தீபிகா படுகோனேவும் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். தீபுகாவிற்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம், எனவே நிறைய குழந்தைகளுடன் குடும்ப வாழ்வில் செட்டிலாகிவிட எண்ணம் கொண்டுள்ளார். 

பெண்களின் முதல் கடமை குடும்பம், தாய்மை அதையே நானும் நிறைவேற்ற நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார். அதேபோல் தமிழில் ‘சென்னை 28’ படம் மூலம் அறிமுகமான அகத்தியனின் மகள் விஜயலட்சுமியும் திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு தயாரிப்பாளராக தனது வாழ்வை தொடர திட்டமிட்டு தற்போது கிருஷ்ணா நடிப்பில் ‘பண்டிகை’ என்னும் படத்தை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close