Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேய்ப்படங்களின் அடுத்தகட்டம். பேய்களுக்கும் வயது சொல்லும் தமிழ்சினிமா.

உண்மையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு செண்டிமெண்ட் மற்றும் திகில் படமாக உருவாகிவருகிறது  டெய்சி. அறிமுக இயக்குநரான ஸ்ரீநாத்ராமலிங்கம் இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார்.

டெய்சி என்ற எட்டு வயதுக்  குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் திகில் கலந்த பேய்ப்படமாக உருவாகிவருகிறதாம் டெய்சி. படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில் "ஒவ்வொரு  குழந்தையும்  பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்ற  கூற்றை உறுதிப் படுத்தும் கதை இது. 

அன்புக்காக  ஏங்கி  அலை பாயும் ஒரு உக்கிரமான  எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்".  என்கிறார்.

  மனிதர்களை வைத்து எழுதப்படும் கதைகளைவிட ஆவிகளை வைத்து எழுதப்படும் கதைகள் பாதுகாப்பு என்று சினிமாக்காரர்கள் நினைக்கத்தொடங்கிவிட்டார்கள் என்பதை நிருபிக்க இந்தப்படம் உதவுகிறது, அதோடு ஆவிகளிலும் வித்தியாசம் காட்டவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்பதால் இந்தப்படத்தில் எட்டுவதுச் சிறுமியை ஆவியாக்கிவிட்டார்கள் போலும்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close