Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் தீபிகாபடுகோன்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதியபடத்தில் ரஜினியுடன் நடிக்க ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு வருகிறார் என்பது உட்பட பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

 

அர்னால்டு மட்டுமின்றி அந்தப்படத்தில் விக்ரமும் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் விட முக்கியமாக, இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி இருந்தது. அதற்கும் தற்போது ஒரு பெயர் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் நடிக்க தீபிகாபடுகோனேவை அணுகியிருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு நிறையநாட்கள் ஒதுக்கவேண்டும் என்பதால் தொடக்கத்தில் யோசித்திருக்கிறார். அதன்பின் அவர் வரவேண்டிய நாட்கள் பற்றி ஒரளவு தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அதன்பின் அவரும் இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகுதான் இந்தப்படம் பற்றிய செய்திகளை வெளியில் சொல்லவே செய்வார்களாம்.

அமிதாப்புக்கு மகளாக நடித்த தீபிகா ரஜினிக்கு ஜோடியா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதபடி படத்தின் திரைக்கதை இருக்கும் என்று சொல்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close