Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனைவரும் போட்டியின்றித் தேர்வு, இயக்குநர் சங்கத்தேர்தலில் நடந்தது என்ன?

 தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள்சங்கத்தேர்தல் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர் விக்ரமன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து யாரும்போட்டியிடவில்லை என்பதால் வேட்புமனுக்களைத் திரும்பப்பெறும் நாள் முடிந்ததும் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அறிவிப்பு வந்தது.

இந்தத் தேர்தலில் விக்ரமன் அணியை எதிர்த்து புதியஅலைகள் சார்பில், இணைச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்குப் போட்டியிடப்போவதாக மனுதாக்கல் செய்திருந்தனர். அந்தப்பதவிகளுக்கு விக்ரமன் அணி சார்பாகப் போட்டியிடும் லிங்குசாமி, சுந்தர்.சி, பேரரசு மற்றும் இணைஇயக்குநர் ஏகாம்பவாணன் ஆகியோர் கடும்போட்டியைச் சநதிக்க நேரிடும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் கடைசிநேரத்தில் புதியஅலைகள் சார்பாகப் போட்டியிட்ட அனைவரும் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இயக்குநர்கள் சங்கத்தேர்தலே நடக்காது என்றும் அனைத்துப்பொறுப்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள் என்கிற அறிவிப்பு வரவிருக்கிறதாம். எதனால் இப்படி? என்று விசாரித்தால், தேர்தல் நடந்தால் பல இலட்சங்கள் செலவாகும், அந்தப்பணத்தை உதவிஇயக்குநர்களுக்குப் பயன்படும்வகையில் செலவு செய்கிறோம் என்று விக்ரமன் தரப்பில் உறுதிமொழி கொடுக்கப்பட்டதாம்.

அதோடு தேர்தல் முடிவுக்குப்பின்னர் புதியஅமைப்பு பொறுப்பேற்றதும் புதிதாக சில பதவிகளை உருவாக்கி அதில் புதியஅலைகள் அணியைச் சேர்ந்தவர்களுக்குப் பொறுப்புகள் தரப்படும் என்கிற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். உதவிஇயக்குநர்களுக்கு நன்மை பயக்கும் இந்தச்செயல்களைச் செய்வதாக விக்ரமன் ஒப்புக்கொண்டதால் தேர்தலே இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 
 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்