Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி , விஜய் சேதுபதி?

 ரோமியோ ஜூலியட் படத்தை பார்த்த பிரபு தேவா அந்த படம் பிடித்துப் போக அதை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் தற்போது அடுத்த செய்தியாக ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமானவர் லக்‌ஷ்மண் எனவும் தற்போது அவருக்கு பதில் பிரபுதேவா இயக்குவார் எனவும் கூறுகிறார்கள். 

ரோமியோ ஜூலியட் படத்தில் வேலை செய்த இசையமைப்பாளர் டி.இமான் உட்பட அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்ற இருக்கிறார்களாம். படத்தின் நாயகி தேர்வு நடந்துவருகிறது. 

பிரபு தேவா இயக்கத்தில் ’எங்கேயும் காதல்’ படம் மூலம் ஹன்சிகா முதன்முதலில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தின் நாயகி ஹன்சிகாவாக இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

பிரபுதேவா விரைவில் தமிழில் ஒரு படம் இயக்குவேன் என சில நாட்களுக்கு முன்பு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றார் போல் தினமும் ஒரு செய்தியாக பிரபுதேவா குறித்து வந்தவண்ணம் உள்ளன. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close