Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாபாநாசத்தில் நடிக்க ரஜினி மறுத்தது ஏன்?

பாபாநாசம் படத்தில் ஒரு காட்சியில் போலீஸ், கதாநாயகனை அடிப்பது போல் கதை வருவதால், அந்த படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுத்ததாக இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் நடிப்பில் வெளியே வந்து ஓடிக் கொண்டிருக்கும் பாபநாசம் படம், 'திரிஷ்யம்' என்ற மலையாள படத்தின் தழுவல் ஆகும். நடிகர் மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம் மலையாளத்தில் சக்கை போடு போட்டது. உண்மையை சொல்லப்போனால் அதாள பாதாளத்தில் வீழ்ந்து கிடந்த மோன்லாலின் மார்க்கெட்டை மீண்டும் திரிஷ்யம்தான் தூக்கி நிறுத்தியது. தனது இயல்பான நடிப்பால், அந்த படத்தில் கேரக்டாகராகவே மோகன்லால் வாழ்த்து காட்டினார்.

'திரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்தான், தமிழில் கமலஹாசன் நடிப்பில் 'பாபாநாசம்' படத்தை இயக்கியுள்ளார். கதையும் இவருடையதுதான். கமலஹாசனை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு முன் ஜீத்து ஜோசப் ரஜினிகாந்தைதான் அணுகியுள்ளார். கதை கேட்ட ரஜினிக்கு, இந்த படத்தில் வரும் இரண்டு காட்சிகளில் உடன்பாடு இல்லை.

ரஜினி இந்த படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்று ஜீத்து ஜோசப் கூறுகையில்,ரஜினிக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. போலீசார் கதாநாயகனை அடிப்பது போல ஒரு காட்சி வரும். தன்னை அடிப்பது போல் படத்தில் காட்சிகள் இருந்தால் தனது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று ரஜினி நினைத்தார். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியையும் அவர் விரும்பவில்லை . இதையடுத்து வேறு நல்ல கதையம்சத்துடன் அவரை சந்திப்பதாக தெரிவித்து விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்