Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலங்கிய லிங்குசாமி, கை கொடுத்த கமல்..!

இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த 'உத்தம வில்லன்" வியாபார ரீதியாக சோபிக்கவில்லை. இதனால் ஏராளமான பணமுதலீட்டில் படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பண சிக்கலில் தவித்தது.

அந்த  நேரத்தில் "அடுத்ததா லிங்குசாமிக்கு சின்னபட்ஜெட்ல ஒரு படத்தை எடுத்து தரேன்" என்று லிங்குசாமிக்கு உறுதி கொடுத்து இருந்தார், கமல்.

தற்போது 'பாபநாசம்'  ரிலீஸுக்கு பிறகு பாயாசச் செய்தியாய் ஒன்றை  முடிவெடுத்து இருக்கிறார் கமல். அதாவது 'சதிலீலாவதி' ஸ்டைலில்  முழுநீள காமெடி படம் ஒன்றை ரூ.25 கோடி பட்ஜெட்டில் தயாரித்து, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப் போகிறார். இயக்குனர்  சிங்கீதம் சீனிவாசராவ்.

கமலின் படம் சாட்டிலைட், ஓவர்ஸீஸ் என்று நல்ல விலைக்கு வியாபாரமாகும். அதனால் ஓரளவுக்கு கடன் சுமையில் இருந்து லிங்குசாமி விடுபட வாய்ப்பு இருக்கிறது. இதுபோல முன்னணி ஹீரோக்களும் தங்களால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்கு கமல் பாணியை பின்பற்றுவார்களா...?

- எம்.குணா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close