Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் படப்பிடிப்பு துபாயிலிருந்து இத்தாலிக்கு மாறியது ஏன்?

தலைப்பே வைக்காத படத்தில் நடிக்கும் 'தல' படத்தின் முக்கியமான ஃபைட் மற்றும் ஏர்போர்ட் காட்சிகளின் படப்பிடிப்பை துபாயில் நடத்துவதற்காக  திட்டமிட்டு இருந்தார், 'வீரம்" சிவா.

அதற்காக சில மாதத்துக்கு முன்பே துபாய் சென்று லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பு நடத்துவதற்கு துபாய் நாட்டு அரசாங்கத்திடம் அனுமதி வாங்கச் சென்றனர்.

"நோ... நோ இப்போது ரமலான் நோன்பு நடக்குது,  அங்கங்கே மசூதிகள்ல தொழுகை நடக்குது. இப்போ ஷூட்டிங்  நடத்துனா முஸ்ஸிம் மக்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்" என்று மறுத்து விட்டார்கள்.

துபாய் படப்பிடிப்பு லொகேஷன் விவகாரத்தை அஜித் காதில் போட்டு இருக்கிறார், சிவா. "துபாய் அரசு சொல்றது நியாயம்தானே.  திட்டமிட்ட ஷூட்டிங்கை கேன்சல் செய்ய வேணாம். இத்தாலியில லொகேஷனை பாருங்க" என்று சொல்ல, கேமரமேன் வெற்றியை லவட்டிக் கொண்டு இத்தாலி பறந்தார், சிவா.

இத்தாலி ஏர்போர்ட்டில் ஃபைட், இயற்கை எழில் பகுதிகளில் பாடல் காட்சி ஆகியவற்றை படமாக்க ஜூலை 3ஆம் தேதி அஜித், லட்சுமிமேனன், குழுவினரோடு இத்தாலிக்கு பறந்து விட்டார்கள். அங்கே ஜூலை 5ஆம் தேதி (நாளை) முதல் 20ஆம் தேதிவரை  சோனியா காந்தி தாய்பூமியில் 'தல'யின் படப்பிடிப்பு நடக்கிறது.

- எம்.குணா

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close