Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் படத்தில் நடிக்க மறுத்தார் சத்யராஜ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதியபடத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடிக்க சத்யராஜை அணுகியிருக்கிறார்கள். ஏற்கெனவே அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் நயன்தாராவின் அப்பா வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். அதனால் இந்தப்படத்திலும் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அட்லி நினைத்திருக்கிறார்.

அதன்காரணமாக சத்யராஜை அணுகி அவருக்குக் கதையும் சொல்லியிருக்கிறார்கள். அதன்பின்னர் தேதிகள் தொடர்பான பேச்சுகள் வந்தபோது இவர்கள் கேட்கிற தேதிகளில் சத்யராஜ் இல்லை. அவர் எற்கெனவே ஒரு தெலுங்குப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அந்தப்படத்தின் தேதிகளும் இதுவும் ஒன்றாக இருப்பதால் நடிக்க இயலாது என்று சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

பொதுவாக நிறையப்பேர் வில்லன் வேடங்களில் நடிக்கக்கூப்பிடுவதால் அதை அவர் ஒப்புக்கொள்வதில்லை என்று சொல்வார்கள். இந்தப்படத்திலும் வில்லன் கேரக்டருக்குக் கூப்பிட்டிருப்பார்களோ? என்கிற சந்தேகத்தை எழுப்பினால், அவர் வில்லன் வேடம் என்றால் செய்யமாட்டார் என்று அவர்களுக்குத் தெரியும்.

படத்தில் முக்கியமான ஒரு வேடம் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என அணுகியதாகவும் தேதிகள் இல்லாத காரணத்தாலேயே அவர் நடிக்க மறுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜிடம் நடிக்கக்கேட்டு அவரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றொரு தகவல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close