Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சால்ட் & பெப்பர் லுக்கில் சிம்பு!

அஜித்தின் சிறப்பான சால்ட் & பெப்பர் லுக்கில் சிம்பு நடித்துவருகிறார். விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாலு’. இப்படத்தில் ரிலீஸ் தேதி ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் 13 நாட்களில் படம் வெளியாகும் நிலையில் படக்குழு ஒரு பாடல் உருவாக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். படத்தின் இரண்டாவது டிரெய்லர் கடந்த ஜூன்  மாதம் 27ம் தேதி வெளியாகி இதுவரை 1மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

தற்போது படத்தின் ‘வாத்தியாரு’ என்ற பாடல் முழுவீச்சில் படமாக்கப்பட்டு வருகிறது.  இந்த பாட்டில் சிம்பு எம்.ஜி.ஆர், ரஜினி அஜித் மற்றும் சிம்பு என நான்கு தலைமுறை கெட்டப்களில் நடிக்கிறார். இதில் எம்.ஜி.ஆர் ,ரஜினி கெட்டப்புகளுக்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.

அடுத்து அஜித் , மற்றும் சிம்பு படப்பிடிப்புகள் இன்று நடக்க உள்ளதாக ட்விட்டரில் சிம்பு வெளியிட்டுள்ளார். அஜித் கெட்டப்பிற்காக சால்ட் & பெப்பர் லுக்கில் சிம்பு தோன்ற இருக்கிறாராம். இதுகுறித்து ட்விட்டரில் சிம்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்