Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாபநாசம் படத்தில் கெளதமியின் நடிப்பைப் பாராட்டிய மீனா

எந்த வித தடையூறும் இன்றி நீண்ட நாளுக்குப் பிறகு கமல் நடிக்கும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு பாபநாசம் படம் மூலமாக கிடைத்திருக்கிறது. படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்பொழுது ஜித்து ஜோசப் இயக்கத்தில் கமல், கெளதமி நடிப்பில் பாபநாசமாக தமிழிலும் ரீமேக்காகியிருக்கிறது. மலையாளம் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நாயகியாக நடித்திருந்த மீனா. தமிழில் நடித்திருக்கும் கெளதமியை மனமாரப் பாராட்டிப் பேசியிருக்கிறார். 

மீனா பேசியதாவது, “நான், மலையாளம் மற்றும் தெலுங்கில்  நடித்திருக்கிறேன். நிஜமாகவே கமல்சார் ரொம்பவே நல்லா நடிச்சிருக்காரு. படத்திற்கான புது நிறத்தை கமல்சார் தான் கொடுத்துருக்காரு. ஸ்பெஷலா அந்த படத்துக்குனு புது பாஷை கொடுத்துருக்காரு. பாபநாசம் ஏரியா பாஷை படத்துக்கு இன்னும் ப்ளஸ். கெளதமி மேம் ரொம்பவே நல்லா நடிச்சிருக்காங்க.

ஏற்கெனவே நான் அவங்க கதாபாத்திரத்தில் நடிச்சேன். அவங்க நடிச்சதுல நிறைய மாற்றமும் தமிழுக்கு ஏற்றமாதிரி மாத்திருக்காங்க. ரொம்பவே அழகா பண்ணிருக்காங்க. ஒரு அழகான குடும்பத்தை இந்த படத்துல பாக்க முடிஞ்சது. கண்டிப்பா தமிழில் இந்தப் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close