Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயம்ரவியின் நன்றிக்கடன்

கடந்த சில ஆண்டுகளாக பெரியவெற்றி இல்லை என்கிற வருத்தத்தில் இருந்தேன், ரோமியோஜூலியட் படம் அந்தக்குறைத் தீர்த்துவிட்டது என்று சந்தோசமாகச் சொல்லியிருந்தார் ஜெயம்ரவி.

அந்தச் சந்தோசத்தை அவருக்குக் கொடுத்த அப்படத்தின் இயக்குநர் லட்சுமணுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அவருடைய இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் ஜெயம்ரவி. அவர் இப்போது அவருடைய அண்ணன் இயக்கத்தில் தனியொருவன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கிறதாம்.

ஆகஸ்டில் அந்தப்படம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்படத்துக்குப் பிறகு ஜெயம்ரவி நடிக்கும் படம் பற்றி இதுவரை எந்தத்தகவலும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை, பிரபுதேவா இயக்கத்தில் அவர் ஒருபடத்தில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் இருக்கின்றன, அந்தப்படம் முதலில் தொடங்கப்படுமா அல்லது லட்சுமண் இயக்கும் படம் முதலில் தொடங்கப்படுமா என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை.

இந்தப்படங்கள் மட்டுமின்றி நடிகர் ஸ்ரீநாத் இயக்கத்தில் ஒருபடம் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சந்தோஷ்சுப்பிரமணியம் உட்பட சில படங்களில் ஜெயம்ரவியுடன் ஸ்ரீநாத் நடித்திருக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close