Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் திருமணம் குறித்து த்ரிஷா பதில்!

 த்ரிஷா வருண் மணியன் இருவரும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திடீரென ரத்தாகி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் திருமணம் குறித்த பல திட்டங்கள், பிரம்மாண்ட நிச்சயதார்த்தம் என திரையுலகமே இவர்களது திருமணத்தை எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது. 

நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, ஆர்யா என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். தற்போது திருமணம் குறித்த கேள்விக்கு மீண்டும் பதில் அளித்துள்ளார் த்ரிஷா. எனது திருமணம் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டது. நானும் சம்மதித்தேன். அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் திருமணத்தின் போது பல கண்டீஷன்கள் இருந்தன. அது எனக்கு சரியாக படவில்லை. எனவே தான் திருமணத்தை ரத்து செய்தோம். 

இது போன்று நடப்பது பொதுவான விஷயமே. எனக்கும் கலாச்சாரம் தெரியும். நமது கலாச்சாரம், பண்பாடு மீது எனக்கும் நம்பிக்கைகள் இருக்கிறது. எனக்கு என்ன தேவையென்பது குடும்பத்தினருக்கு தெரியும்.அதே சமயம் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளைகளும் நிறைய பேர் உள்ளனர். கண்டிப்பாக அவர்களில் சரியான நபரை தேர்ந்தெடுத்த பின்னர் திருமணம் உறுதி என கூறியுள்ளார். 

தற்போது த்ரிஷா கமலின் ‘தூங்காவனம்’, ’அரண்மனை 2, தெலுங்கில் ‘நாயகி’ உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார். ‘பூலோகம்’,’ அப்பா டக்கர்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close