Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நண்பருக்காக விட்டுக்கொடுத்த கமல்

  மய்யம் என்கிற பெயரில் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார் கமல். அந்தப்பெயரில் ஒருபடத்தை எடுத்திருக்கிறார் கமலின் நண்பரான ஓவியர்ஸ்ரீதர். முழுக்க முழுக்க மாணவர்களை மட்டுமே வைத்து, (மாணவர்கள் என்றால் இப்போதும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,) தயாரிக்கப்பட்டிருக்கும் படம் இது.

இந்தப்படத்தின் கதை திரைக்கதை எல்லாம் தயாரான பிறகு, படத்துக்கு மய்யம் என்கிற பெயர் மிகப்பொருத்தமாக இருந்திருக்கிறது. அந்தப்பெயர், ஒரு திரைப்படத்துக்கான பெயராக யாரும் பதிவு செய்து வைத்திருக்கவில்லையாம். ஆனாலும் மய்யம் என்கிற பெயரைச் சொன்னாலே கமல் நினைவு வரும் என்பது எதார்த்தம் என்பதால் கமலுக்கு மிகவும் தெரிந்தவரான ஓவியர் ஸ்ரீதர், அவரிடம் போய், நாங்கள் தயாரிக்கும் படத்துக்கு இந்தப்பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று கேட்டிருக்கிறார்கள்.

அவரும் நல்லபெயர் நன்றாகச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டாராம். இப்போது படத்தை முழுமையாக எடுத்து முடித்துவிட்டார்கள். மெக்கானிக்கல் இன்ஜினியர் படிப்புப் படித்துக்கொண்டிருக்கும் ஆதித்யாபாஸ்கரன் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். விஷூவல்கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர் கேஆர் இசையமைத்திருக்கிறார். பத்தாம்வகுப்புப் படிக்கும் வருணா எனும் மாணவி இந்தப்படத்தின் உடைவடிவமைப்புகளைச் செய்திருக்கிறார். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close