Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் சாதனையை முறியடிப்பாரா விஜய்?

 கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்’ இந்த படத்தின் டீஸர் தான் தென்னிந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸராக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கிய  ‘ஐ’ பட டீஸர் இருப்பது  குறிப்பிடத்தக்கது. 

இதுவரை ‘ஐ’ பட டீஸரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இரண்டாம் இடத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் 53 லட்சத்தை கடந்து உருவாகியுள்ளது. மேலும் இந்திய அளவில் அதிகம் விரும்பப்பட்ட டீஸராகவும் என்னை அறிந்தால் டீஸர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. இந்த படத்தின் டீஸர் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி மதியம் 2மணிக்கு வெளியிடப்பட்டது. 

இதுவரை படத்தின் டீஸர் 53 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்னும் ‘என்னை அறிந்தால்’ டீஸர் சாதனையை முறியடிக்க சில ஆயிரங்களே உள்ளன. இந்த நிலையில் தென்னிந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸராக இரண்டாம் இடத்தை ‘புலி’ பிடிக்குமா என ரசிகர்கள் அடுத்த ட்ரெண்டுக்கு காத்திருக்கிறார்கள். பார்க்கலாம்.. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close