Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலில் விழுந்த நித்யாமேனன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சுற்றிலும் நடிப்பால் கலக்கிவரும் நடிகை நித்யாமேனன். சமீபத்தில் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் நின்றவர். அவரின் நடிப்பு பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

“ நான் நடிப்பதில் பாதியை  என் கண்களாலே நடித்துவிடுவேன். அதை எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை. நான் பார்த்து ரசித்தது, கற்பனையில் நினைத்தவைகளையே நான் உதாரணமாக எடுத்துக்கொள்வேன். என்னுடைய வாழ்க்கையே மிகப் பெரிய ஆசான் மாதிரி தான் என்கிறார் நித்யாமேனன்.

இருந்தாலும் என்னைப்பற்றியான பல வதந்திகள் வரத்தான் செய்கின்றன. நான் கோபப்படுவதோ, இயக்குநரை மரியாதை இன்றி பேசுவதோ கிடையாது. நிறைய இயக்குநர்கள் கதை சொல்ல வருவார்கள். எனக்கு பிடித்தமான பாத்திரத்தில் நன் நடிக்கிறேன்.

நான் நடித்த படங்களின் வெற்றி, தோல்வி பற்றி நான் வருந்துவது கிடையாது. என் கேரக்டரை நன்றாக நடித்துவிட்டு சென்றுவிடுவேன்.

உங்களுக்கு காதல் வந்திருக்கிறதா என்று கேட்டதற்கு, “ எனக்கு 18 வயதில் காதல் வந்தது. கல்லூரியில் படித்த போது காதலித்தேன். இப்போ யாரையும் காதலிக்க வில்லை. தனிமையில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று முடித்தார் நித்யாமேனன். 

நித்யாமேனன் நடிப்பில்  ருத்ரமாதேவி மற்றும் அப்பாவின் மீசை ஆகிய படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close