Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரேநாளில் பிரமாண்ட பாகுபலியும் எளிமையான காமராஜரும்

மிகபிரமாண்டமான படமான பாகுபலி ஜூலை பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. இதுபோன்ற பிரமாண்டபடங்கள் வெளியாகிற நேரத்தில் மற்ற படங்களை வெளியிடத் தயங்குவார்கள். ஆனால் அதேநாளில் மிக எளிமையான தலைவரின் வாழ்க்கைப்படமும் வெளியாகவிருக்கிறது.

காமராஜரின் வாழ்க்கையைப் படமாக எடுத்து 2004 ஆம் ஆண்டு வெளியிட்டார்கள். அந்தப்படத்தை டிஜிட்டலாக்கி எடுத்திருப்பதோடு அதில் சில காட்சிகளையும் புதிதாகச் சேர்த்து எடுத்திருக்கிறார்கள். புதிதாக எடுக்கப்பட்ட காட்சிகளில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அந்தப்படத்தையும் ஜூலை பத்தாம்தேதியன்றே வெளியிடவிருக்கிறார்கள்.

பாகுபலி போன்ற பெரியபடம் வெளியாகிற நேரத்தில் இப்படி ஒருபடத்தை வெளியிடுகிறார்கள். இந்தப்படத்துக்கென்று குறிப்பிட்ட ரசிகர்கள் இருப்பார்கள், அவர்கள் எப்படியும் படத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதோடு முதலில் வெளியானபோது பார்க்காத பலரும் இப்போது பார்க்கவிரும்புவார்கள் என்கிற எண்ணத்தில் படத்தை வெனியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் பாகுபலிக்கான விளம்பரங்கள் இருக்கின்றன, இந்தப்படம் வெளியாவது திரையுலகிலேயே பலருக்குத் தெரியாது என்கிற நிலைமை. பிரமாண்டமும் எளிமையும் ஒரேநாளில் வெளியாகிற முரண் திரையுலகில்தாம் சாத்தியம் என்பதற்கு இந்தப்படங்களே எடுத்துக்காட்டு.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close