Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னணி நடிகைகளையே தேடும் உதயநிதி... நயனைத் தொடர்ந்து மீண்டும் ஹன்சிகா!

இந்தியில் ஹிட் அடித்த ஜாலி எல்.எல்.பி படத்தின் உரிமையை வாங்கி தமிழில் தயாரித்து நடிக்கவிருக்கும் உதயநிதி படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். சேட்டைப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் ஹன்சிகா நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குநர் அகமது இயக்கத்தில் இதயம் முரளி என்ற படத்தில் உதயநிதி நடிக்கவிருந்தார். அனிருத் இசை, மதி ஒளிப்பதிவு என்று திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அதிகப்படியான காட்சிகள் வெளிநாடுகளில் படமெடுக்கவேண்டும் என்பதால் பட்ஜெட் காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக இந்தியில் ஹிட் அடித்த ஜாலி எல்.எல்.பி படத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் உதயநிதி.

ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அர்ஷத் வர்ஷி வேடத்தில் உதயநிதி நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரமான போமன் இரானி வேடத்தில் நடிப்பதற்கு பிரகாஷ்ராஜ் அல்லது ராதா ரவி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை அகமது தான் இயக்கவிருக்கிறார்.

ஹன்சிகா தான் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஹன்சிகாவுடன் இரண்டாவது படம் என்பதால் உதயநிதியின் முதல் படமான ஓகே ஓகே படம் போல ஜாலி எல்.எல்.பியும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்