Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.எஸ்.விஸ்வநாதன் நலமாக இருக்கிறார்!

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடையாரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல் நிலை தற்பொழுது சீராகிவருகிறது.

“எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் நலம் சீராக இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருப்பார் பின்னர்  வீடு திரும்புவார், இந்த ஒரு வாரமும் அவருக்கு முழுமையான ஓய்வு தேவை என்பதால் மருத்துவமனையில் இருப்பார் “  என்று எம்.எஸ்.விஸ்வநாதனின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close