Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாரி பட மறுதணிக்கைக்கு புகைபிடிக்கும் காட்சி காரணமா?

பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி படத்துக்குத் தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டது.

இதனால் வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதால் தயாரிப்பாளர்கள் தரப்பில் மறுதணிக்கை கோரப்பட்டதாம். அதன்பிடி நடந்த மறுதணிக்கையில் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

முதலில் யுஏ கொடுத்ததற்கு படத்தில் இருந்த சில வசனங்கள் மட்டுமின்றி தனுஷ் புகைபிடிக்கும் காட்சியும் காரணம் என்று சொல்லப்பட்டது. இப்போது அந்தக்காட்சிகளை நீக்கிவிட்டதாகவும் அதனாலேயே யு சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. புகைபிடிப்பதற்கு எதிராக எராளமான பரப்புரைகள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

குறிப்பாக திரைப்படங்களில் முன்னணிநடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கவேண்டாம் என்கிற கோரிக்கை பல தரப்பினராலும் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.  அவற்றைக் கணக்கிலேயே கொள்ளாமல் படத்தை எடுப்பதால்தான் இம்மாதிரி சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close