Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி ரேஸில் கமல், அஜித், சூர்யா!

 இந்த வருட தீபாவளி படங்கள் வரிசையில் கமலின் ‘தூங்காவனம்’, அஜித்தின் ‘தல 56’, சூர்யாவின் ‘24’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. 

ராஜேஷ் இயக்கத்தில் கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் தூங்காவனம்’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்தது முதல் படு வேகமாக நடந்துவருகிறது. மேலும் எதிர்பார்ப்புகளை எகிற விடாமல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முதலிலேயே வெளியிட்டு இணையத்தை சூடு பறக்க விட்டார்கள் கமல் &கோ. 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேகத்தை பார்க்கையில் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. மேலும் கமலும் இந்த வரும் மூன்று படங்களேனும் கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக ஒரு சந்திப்பில் கமலே கூறினார். 

 

அதே போல் ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன் , லட்சுமி மேனன், சூரி நடிப்பில் உருவாகி வரும் அஜித்தின் 56வது படம் தீபாவளி சிறப்பாக வெளியாகும் என படம் ஆரம்பித்த போதே தகவல்கள் வெளியானது. மேலும் படக்குழுவும் அதை நோக்கியே பணிகளை நடத்திவருகிறார்கள்.

அடுத்ததாக விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் ‘24’ படத்தின் ரிலீசும் தீபாவளியை நோக்கி இருப்பதாக தெரிகிறது. இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால் எதிர்ப்பார்ப்புகள் இன்னும் சற்று அதிகமாகவே உள்ளன. 

பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலே பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் தற்போது எல்லா பெரிய படங்களும் பண்டிகை நாட்களை நோக்கி ரிலீஸ் தேதிகளை முடிவு செய்துவருகிறார்கள். இன்னும் விஷால் ,பாண்டிராஜின் புதிய படம். 

தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ டீமின் அடுத்த படம். என பட தேதிகள் அறிவிக்கப்படாத பெரிய பட்ஜெட் படங்கள் லிஸ்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களின் ரிலீஸ் தேதிகளும் முடிவாகும் பட்சத்தில் மாற்றங்கள் உருவாகலாம். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்