Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவுக்கு சோதனை மேல் சோதனை

சிம்பு நடிப்பில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியாகவிருக்கும் படம் வாலு. இப்படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தனர். தற்பொழுது வாலு படத்தை வெளியிட இடைகால தடை விதித்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. 

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாராகி வரும் வாலு படத்திற்கு அடுத்தடுத்து பல பிரச்னைகள் நீடித்தவண்ணம் இருந்தன. இறுதியில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியீட்டில் ஜூலை 17ல் உறுதியாக வெளிவரும் என்று அறிவித்திருந்தனர்.

சமீபத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் வெளியீட்டு உரிமையை 2013ல் 10கோடிக்கு மேஜிக் ரேஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். தற்பொழுது வேறு நபர் மூலம் இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். என்னைத் தவிர வேறு எந்த நிறுவனம் மூலமாகவும் வாலு படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று மேஜிக் ரேஸ் நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன் அடிப்படையில் இன்று காலை வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது, வழக்கை 13ம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 17ம் தேதி தனுஷ் நடிக்கும் மாரி உறுதியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வாலு படம் மாரியுடன் போட்டிப்போடுமா என்பது வரும் 13ம் தேதி வழக்கு விசாரணையில் தெரியவரும். சிம்புவுக்கு சோதனை மேல் சோதனை வந்துகொண்டிருக்கிறது, இதிலிருந்து எப்போது விடுபடுவாரோ?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close