Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யாவின் மாஸ், கார்த்தியின் கஷ்மோரா இரண்டும் ஒரே கதையா?

 கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துவரும் படம் ’கஷ்மோரா’.இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒரு கார்த்தி பேயாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே பாணியில் இரண்டு கெட்டப் அதில் ஒருவர் பேய் என்ற கதையில் தான் இவரது அண்ணன் சூர்யா ‘மாஸ்’ படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன.

ஸ்ரீதிவ்யா பக்கத்து வீட்டு பெண், பள்ளி மாணவி என சாதரண கதாபாத்திரங்களில் நடித்தவர் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறாராம். சென்னையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்திவரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகளுக்காக பல்கேரியா செல்ல உள்ளனர் படக்குழு.இதுவும் சற்றே உதைக்கிறது. ஏனெனில் ‘மாஸ்’ கதைப்படி ஒரு சூர்யா கனடாவில் இருப்பார் அதேபோல் இந்த படத்திலும் சென்னையில் பாதி படப்பிடிப்புகள், பல்கேரியாவில் பாதி படப்பிடிப்புகள் என நடத்துகிறார்கள்.

இதற்கான சில லோகேஷன்களை இயக்குநர் கோகுல் சமீபத்தில் தேர்வு செய்துவிட்டு வந்துள்ளார். ‘மாஸ்’ பட நாயகி நயன்தாராதான் இந்த படத்திலும் முதன்மை நாயகி. என்ன அந்த படத்தின் பிரணிதாவிற்கு பதில் இதில் ஸ்ரீதிவ்யா,  பத்திரிகையாளர் கேரக்டரில் வருகிறார். ஸ்ரீதிவ்யா பத்திரிகையாளர் எனில் முதன்மை நாயகியான நயன்தாரா பாத்திரம் இன்னும் கணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.  எனினும் இப்போது அடுத்த கேள்வி சூர்யாவின் ‘மாஸ்’ படத்தை சிறிதேனும் கூட கஷ்மோரா ஒத்திருந்தால் கண்டிப்பாக விமர்சன ரீதியில் படம் சில சிக்கல்களுக்கு ஆளாகிவிடும் . மாஸ் படத்திலிருந்து , கஷ்மோராவை எப்படி வித்யாசப்படுத்த போகிறார் கோகுல் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close