Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனக்கு எதிராகக் கெட்ட எண்ணத்துடன் வழக்கு, ரஜினி கோபம்

என்னிடம் பணம் பறிக்க முயற்சி நடக்கிறது, கடன் வாங்குவதற்கு நான் யாருக்கு உத்தரவாதம் கொடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் ரஜினிகாந்த் மனு கொடுத்துள்ளார்.

ரஜினியின் சம்பந்தி கஸ்தூரிராஜா மீது முகுன்சந்த் போத்ரா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியதாவது, “தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா என்னிடம் பல லட்சங்கள் வாங்கினார், தன் மகன் ரஜினியின் மகளை திருமணம் செய்துகொண்டதால் நான் பணம் தராவிட்டாலும் என் சம்மந்தி ரஜினி தந்துவிடுவார் என்று கூறினார். பின்னர் வாங்கிய பணத்திற்கு காசோலையாக கொடுத்தார். ஆனால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது”.

பின்னர் ரஜினியின் வீட்டைத் தொடர்புகொண்டு விவரம் சொன்ன போது, ரஜினி பெயரை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று கூற 2012ல் ரஜினிகாந்தின் பெயரை சொல்லி பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என்று கஸ்தூரி ராஜாமீது போலீஸில் புகார் செய்தார் செய்தேன்.

அப்போது இப்புகாரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் சிவில் பிரச்னை என்று பிரச்னையை முடித்து வைத்தனர். அதைத் தொடர்ந்து மெயின் ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு என் பெயரை பயன்படுத்தகூடாது என்று ரஜினி வழக்கு தொடர்ந்தார். அதில் ரஜினி “என் பெயரை பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை” என்று மனு தாக்கல் செய்தார்.
 
ஆனால் இதுவரை கஸ்தூரி ராஜா மீது ரஜினிகாந்த் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இதனால் கஸ்தூரிராஜாவும் ரஜினியும் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ரஜினி தன்னுடைய சம்பந்தி கஸ்தூரி ராஜாமீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று ரவிசந்தரபாபு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ரஜினிகாந்த சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “ முகுல் சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த வழக்கை கெட்ட எண்ணத்துடன் எனக்கு எதிராக போத்ரா தாக்கல் செய்துள்ளார்.

என்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கடன் வாங்க நான் உத்தரவாதமும் அளிக்கவில்லை. கஸ்தூரி ராஜா மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இப்படிப்பட்ட கோரிக்கையுடன் வழக்கை தாக்கல் செய்யமுடியாது. அதுமட்டுமில்லாமல் கஸ்தூரிராஜாவுக்கு எதிரான மனுதாரர் தொடர்ந்த செக் மோசடி வழக்கை ஏற்கெனவே ஜார்ஜ் டவுண் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த சார்பில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close