Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் சங்க பிரச்னை: மௌனம் கலைத்தார் கமல்ஹாசன்!

நடிகர் சங்க பிரச்னையில் அறிவுரை கேட்டால் சொல்வோம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும், நடிகர் விஷால் அணியினருக்கும் இடையே நடிகர் சங்க கட்டட விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. நடிகர் சங்கத்தில் பெரும் முறைகேடு நடப்பதாக நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என்று சங்கத் தலைவர் சரத்குமார் அண்மையில் அறிவித்தார். இதனையடுத்து நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி, நடிகர் விஷால் உள்ளிட்ட சில நடிகர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி நடிசர் சங்க  பிரச்னை நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார் ஆகியோர் இதுவரை வாய் திறந்து எதுவும் கூறவில்லை. இவ்விவகாரத்தில் எந்தவிதமான கருத்துகளையும் கூறவிரும்பவில்லை என்று அவர்களது தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அதேபோல் விஜய் தரப்பில், "அவர் தற்போது லண்டனில் இருக்கிறார். அவர் நாடு திரும்பிய உடன் தனது கருத்தை தெரிவிப்பார்' என்று கூறப்பட்டது. இருப்பினும், அவரும் இதுவரை எந்த கருத்துக்களையும் கூறவில்லை.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 'பாபநாசம்' திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசனிடம்,  நடிகர் சங்க பிரச்னையில் பிரபல நடிகர்கள் யாரும் இதுவரை கருத்துகூறவில்லையே? என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ''நடிகர் சங்க பிரச்னை குறித்து எங்களிடம் அறிவுரை கேட்டால் நாங்கள் சொல்வோம்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close