Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல வேடங்களில் சிவகார்த்திகேயன், புதிய படம் பற்றிய தகவல்கள்

அறிமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தில் மூன்று வேடங்களில் தோன்றவிருக்கிறார். அவர் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்கிறார். 

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளராக அனிருத், ஒலிப்பதிவாளராக ரசூல் பூக்குட்டி மற்றும் மேக்கப்புக்காக ஐ படத்தில் பணிபுரிந்த ஷான் ஃபுட் என பெரிய அணியே சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்தில் பணிபுரியவிருக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்கி நடந்துவருகிறது. சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். வாலிபர், முதியவர் மற்றும் பெண் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.  கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் அணுகியிருக்கிறார்களாம். ஆனால் சமந்தா, ஹன்சிகா என்று அனைவரும் பிஸியாகவிருப்பதால் வேறு டாப் ஹீரோயின் யாரையாவது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக தெரிகிறது.

இப்படத்தை இயக்கும் பாக்யராஜ், அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தை ராஜா புதிதாக தொடங்கிய 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close