Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் அதிரடி பதில்...காரணம் கமலா?

தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு என டாப் நடிகர்கள் படங்களில் செம பிசியாக நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். தமிழில் ஒரே நேரத்தில் விஜய்யுடன் ‘புலி’, மற்றும் அஜித்துடன்  ‘தல 56’ என நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். 

அதே போல் இந்தியில் ‘கப்பர் ஈஸ் பேக்’ படத்தில் அக்‌ஷய் குமாருடன் நடித்து அந்த படமும் ஹிட்டடிக்க அடுத்த கட்டமாக அணில் கபூருடன் இணைந்து 2007ம் ஆண்டு வெளியான ‘வெல்கம் பேக்’ படத்தின் அடுத்த பாகத்தில் நடித்துவருகிறார்.

இது தவிர்த்து இந்தியிலேயே ‘யாரா’, ‘ராக்கி ஹேண்ட்சம்’ என ஸ்ருதி ஹாசன் ஒரே நேரத்தில் பல பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் திருமணம், குறித்த கேள்விக்கு தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை என பதிலளித்துள்ளார்.

வேறு வேறு எண்ணங்கள் உண்டாகும் போது திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாத நிலை உண்டாகிவிடும் எனக் கூறியுள்ளார். பிறகு பிரிய நேரிடும் என திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். மும்பையில் தனியாக வசித்து வரும் ஸ்ருதியின் திருமணம் குறித்த முடிவு அவருடைய பெற்றோர்களின் பிரிவின் தாக்கமோ என்னமொ. திருமணத்தின் மீது ஈடுபாடில்லாமல் மாற்றியுள்ளது.

என்ன தான் பெரிய நடிகரின் மகள், சினிமாவின் முன்னணி நடிகை என பல நல்ல விஷயங்கள் வாழ்க்கையில் இருப்பினும். அம்மா ,அப்பா இருவரும் பிரிந்து இருந்தால் எப்பேற்பட்ட மனிதனுக்கும் கொஞ்சம் சிரமம் தான். அதற்கு ஸ்ருதி ஹாசனும் விதிவிலக்கல்ல. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close