Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரிஷ்யம் வசூலை முறியடித்த பாபநாசம்!

 ஜீது ஜோசப் இயக்கத்தில் கமல், கௌதமி, , கலாபவன் மணி, ஆஷா சரத், நிவேதா தாமஸ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘பாபநாசம்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் முழுநீள குடும்பச் சித்திரம் என்றே சொல்லவேண்டும்.படம் வெளியாகி அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக் தான்  இந்த பாபநாசம்’. கன்னடம் , தெலுங்கு , இந்திவரை என இந்தியாவின் பிராதான மொழிகள் அனைத்திலும் வெளியாகி மெகா ஹிட்டடித்து வருகிறது.

தமிழில் வெளியான பாபநாசம் படம்  மலையாள த்ரிஷயம் படத்தைக் காட்டிலும் வசூலில் ஹிட்டடித்திருப்பதுதான் இதில் சிறப்பு. முதல் மூன்று நாட்களில் மட்டும் 25 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான எந்த படங்களும் முதல் மூன்று நாட்களில் இவ்வளவு வசூலை பெறவில்லை. 

அதே போல் மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படமும் முதல் வாரத்தில் மொத்தமாக 6.7.கோடியை வசூலித்து 150 நாட்கள் மொத்த வசூலாக 55 கோடிகளை மட்டுமே வசூலித்தது. ஆனால் பாபநாசம் மூன்று நாட்களில் 25 கோடிகளையும் இதே வேகத்தில் சென்றால் படம் 100 கோடியை விரைவில் தொடும் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் ‘பாபநாசம்’ படத்திற்கு நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளன. இதை முன்னிட்டு படக்குழு நேற்று நன்றி , மற்றும் பட வெற்றிக் கொண்டாட்டாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close