Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவுக்கு எதிராக சதி நடக்கிறது - டி.ராஜேந்தர் கண்ணீர்ப் பேட்டி

நல்ல மனம் படைத்தவன் என் மகன், ஆனால் என் மகன் வளரக்கூடாது, அவன் படம் வெளியாகிவிடக்கூடாது என்று சிலர் சதி செய்கிறார்கள் என்று டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சிம்பு நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் கிடந்து ஜூலை 17ம் தேதி வாலு ரிலீஸாகும் என்று அறிவித்தனர். இதற்கு நடுவே மேஜிக் ரேஸ் நிறுவனம், நாங்கள் ஒப்பந்தம் செய்த வெளியீட்டு உரிமையை வேறு நபருக்கு கொடுத்ததாக வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து,  வழக்கு ஜூலை 13ம் தேதிக்கு விசாரணையை  தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில்  டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

டி.ராஜேந்தர் கூறியதாவது, “ வாலு படம் ஜூலை 17ல் வெளியாகவிருக்கிறது என்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நாங்கள் விளம்பரப்படுத்தி வருகிறோம். அப்போதெல்லாம் எங்கு போனார்கள், படம் வெளியாகும் நேரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சிம்புவின் படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காகவே சதிதிட்ட வேலைகள் நடக்கிறது.

நான் கடவுளை நம்புகிறவன். நிச்சயம் எங்களுக்கு நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். அதுமட்டுமில்லாமல் தீர்ப்பு வரும் வரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக வாலு, வேட்டை மன்னன் என்று இரு படங்களில் நடித்தவர் என் மகன் சிம்பு. இரண்டு படமுமே நிதி பிரச்னைகளால் சிக்கி தவிக்கும் நேரத்தில் தனக்கு உரிய சம்பளம் கிடைக்காவிட்டாலும் வாலு படத்தை முடித்து கொடுத்தார் சிம்பு. என் மகன் நல்ல மனம் படைத்தவன்.

சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கூட  என் சொத்துக்களை முழுவதுமாக இழந்தேன் என்று கண்ணீர் மல்க பேசினார் சிம்பு. அவர் சம்பாதித்து வைத்த சொத்துகளை மட்டுமே அவர் இழந்தார். நானும், என் மனைவியும் அவருக்காக சொத்து சேர்த்து வைத்திருக்கிறோம். அந்த சொத்துக்களை எல்லாம் விட என் மகன் எங்களுக்கு மிகப்பெரிய சொத்து.

ஜூலை 13ம் தேதி தீர்ப்பு வருகிறது. மேலும் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கவில்லை. வழக்கு விசாரணை தள்ளி வைத்திருக்கிறார்கள். என்ன தீர்ப்பென்றாலும் நான் தலைவணங்குவேன். என்று கண்ணீருடன் பேசினார் டி.ராஜேந்தர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close